பங்குச்சந்தை | சென்செக்ஸ் 440 புள்ளிகள் உயர்வு

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 440 புள்ளிகள் உயர்வு
Updated on
1 min read

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் இன்று (திங்கள்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 469 புள்ளிகள் உயர்வடைந்து 62,970 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 123 புள்ளிகள் உயர்ந்து 18,622 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கின. காலை 09:41 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 440.78 புள்ளிகள் உயர்வடைந்து 62,942.47 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 110.70 புள்ளிகள் உயர்ந்து 18,610.05 ஆக இருந்தது.

அமெரிக்காவின் கடன் உச்ச வரம்பை உயர்த்துவது தொடர்பாக தற்காலிக உடன்படிக்கை எட்டப்பட்டத்தைத் தொடர்ந்து உலகளாவிய சந்தைகளில் நிலவிய சாதகமான சூழல்கள் காரணமாக இந்தியப் பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கின.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை எம் அண்ட் எம், ஹெச்டிஎஃப்சி, இன்ட்ஸ்இன்ட் பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், கோடாக் மகேந்திரா பேங்க், பஜாஜ் ஃபின்சர்வ், நெஸ்ட்லே இந்தியா, அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஆக்ஸிஸ் பேங்க், டைட்டன் கம்பெனி, பாரதி ஏர்டெல், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, எல் அண்ட் டி, பஜாஜ் ஃபைனான்ஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ், ஐசிஐசிஐ பேங்க், என்டிபிசி, ஏசியன் பெயின்ட்ஸ், டாடா ஸ்டீல், இன்போசிஸ், மாருதி சுசூகி, டெக் மகேந்திரா பங்குகள் உயர்வில் இருந்தன. சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், பவர் கிரிடு கார்ப்பரேஷன், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் பங்குகள் சரிவில் இருந்தன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in