சென்செக்ஸ் 629 புள்ளிகள் உயர்வு

சென்செக்ஸ் 629 புள்ளிகள் உயர்வு
Updated on
1 min read

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் வெள்ளிக்கிழமை வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 629 புள்ளிகள் (1.02 சதவீதம்) உயர்வடைந்து 62,501 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 178 புள்ளிகள் (0.97 சதவீதம்) உயர்ந்து 18,499 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கின. காலை 09:48 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 214.59 புள்ளிகள் உயர்வடைந்து 62,087.21 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 49.95 புள்ளிகள் உயர்ந்து 18,371.10 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளின் சாதகமான போக்கு, புதிய வெளிநாட்டு நிதிகள் வரவு, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ் போன்ற பங்குகளின் உயர்வு ஆகிய காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் இறுதி நாள் வர்த்தகத்தை தலா 1 சதவீதம் ஏற்றத்துடன் நிறைவு செய்தன.

இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 629.07 புள்ளிகள் உயர்வடைந்து 62,501.69 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 178.20 புள்ளிகள் உயர்ந்து 18,499.35 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ்,ஹெச்சிஎல் டெக்னாலாஜிஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், விப்ரோ, டெக் மகேந்திரா, அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், டாடா ஸ்டீல், டைட்டன் கம்பெனி, மாருதி சுசூகி, ஐசிஐசிஐ பேங்க், டிசிஎஸ், இன்போசிஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, கோடாக் மகேந்திரா பேங்க், பஜாஜ் ஃபின்சர்வ், டாடா மோட்டார்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், ஐடிசி, எல் அண்ட் டி, நெஸ்ட்லே இந்தியா, ஹெச்டிஎஃப்சி பேங்க், இன்டஸ்இண்ட் பேங்க், எம் அண்ட் எம், ஏசியன் பெயின்ட்ஸ், ஹெச்டிஎஃப்சி, பங்குகள் உயர்ந்திருந்தன. பாரதி ஏர்டெல், பவர்கிரிடு கார்ப்பரேஷன், என்டிபிசி பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in