பங்குச்சந்தை | சென்செக்ஸ் 214 புள்ளிகள் உயர்வு 

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 214 புள்ளிகள் உயர்வு 
Updated on
1 min read

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் இன்று (வெள்ளிக்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 104 புள்ளிகள் உயர்வடைந்து 61,977ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 31 புள்ளிகள் உயர்ந்து 18,352ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கின. காலை 09:48 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 214.59 புள்ளிகள் உயர்வடைந்து 62087.21 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 49.95 புள்ளிகள் உயர்ந்து 18371.10 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளின் கலப்பு சூழலுக்கு மத்தியில் அமெரிக்க பங்குச்சந்தையில் நிலவிய சாதகமான போக்குக் காரணமாக வாரத்தின் இறுதி நாள் பங்குச்சந்தை வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கின.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை டெக் மகேந்திரா, பஜாஜ் ஃபின்சர்வ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், விப்ரோ, என்டிபிசி, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், இன்போசிஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், எம் அண்ட் எம், ஐடிசி, எல் அண்ட் டி, கோடாக் மகேந்திரா பேங்க், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், ஏசியன் பெயின்ட்ஸ் பங்குகள் உயர்வில் இருந்தன. பவர் கிரிடு கார்ப்பரேஷன், ஹெச்டிஎஃப்சி, ஆக்ஸிஸ் பேங்க், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ பேங்க், இன்டஸ்இன்ட் பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், பார்தி ஏர்டெல், நெஸ்ட்லே இந்தியா, டாடா மோட்டார்ஸ் பங்குகள் சரிவில் இருந்தன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in