Published : 06 Oct 2017 09:22 PM
Last Updated : 06 Oct 2017 09:22 PM

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: புதிய சலுகைகள், வரிக்குறைப்பு அறிவிப்புகளை வெளியிட்டார் அருண் ஜேட்லி

 

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் புதுடெல்லியில் இன்று நடைபெற்றது இதில் சில புதிய சலுகைகள் மற்றும் வரிக்குறைப்பு அறிவிப்புகளை வெளியிட்டார் அருண் ஜேட்லி.

ஜிஎஸ்டி வரி வசூல் குறித்த விவரங்கள் தெரியவில்லை ஏனெனில் இது மாற்றத்தில் உள்ள காலகட்டமாகும் என்றார் அருண் ஜேட்லி.

ஜேட்லி அறிவிப்புகள்:

ஏற்றுமதியாளர்களின் பிரச்சினைகளை அதிகாரிகள் குழுவினர் பரிசீலித்து வருகின்றனர். அவர்களுக்கு திருப்பி அளிக்க வேண்டிய தொகையை அளிக்கும் நடைமுறை இன்னும் சில காலம் எடுக்கும் என்று தெரிகிறது.

மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் தொகை திருப்பிக் கொடுப்பு நடவடிக்கையைத் தொடங்கி ஏற்றுமதியாளர்களுக்கு காசோலைகளை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதத்திற்கான ரீஃபண்ட் தொகை அக்டோபர் 10-ம் தேதி முதலும், ஆகஸ்ட் மாதத்திற்கான ரீஃபண்ட் தொகை அக்டோபர் 18 முதலும் வழங்கப்படும். இது இடைக்கால நடைமுறை. கமிட்டி இதற்கு நீண்ட கால தீர்வையும் வழங்கியுள்ளது.

ஏற்றுமதியாளர்களுக்கு இ-வாலட் வசதி:

ஜிஎஸ்டியில் இப்போதைக்கு விலக்கு எதுவும் இல்லை என்பதால் இப்போதைக்கு ஏற்றுமதியாளர்களுக்கு இ-வாலட் அளிக்கப்படும். இதன் மூலம் ரீஃபண்ட் முன் பணமாக ஒரு தொகை அளிக்கப்படும். இதனடிப்படையில் நிறுவனங்கள் ஐஜிஎஸ்டி, மற்றும் ஜிஎஸ்டி வரிகளைச் செலுத்த முடியும்.

இந்த இ-வாலட் வசதி ஏப்ரல் 1, 2018-ல் தொடங்கப்படும், ஒரு தொழில்பூர்வ தொழில்நுட்ப நிறுவனம் இதற்காக நியமிக்கப்படும்.

சிறுநிறுவனங்களுக்கான திட்டம்:

வரிவசூல்கள் பெரும்பாலும் பெரிய தொழில்களிலிருந்துதான் வருகிறது (94-95%) இது அதிகரிக்க வேண்டும். நடுத்தர மற்றும் சிறு தொழில்கள் வரிவலைக்குள் இருக்க வேண்டும் எனவே வரி செலுத்துவோர் எண்ணிக்கை பரவலாகும்.

தொகுப்பு முறைத் திட்டத்தின் கீழ் சலுகை பெற இதுவரை ஆண்டுக்கு ரூ.75 லட்சம் விற்பனை செய்து வந்த தொழில் நிறுவனங்கள் இருந்து வந்தன, தற்போது இந்தச் சலுகையைப் பெறுவதற்காக ரூ.1கோடி வரை ஆண்டு விற்பனை உள்ள நிறுவனங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் 3 வகையான வரி செலுத்துவோர் உள்ளனர்:

வாணிப நிறுவனங்கள் 1% வரி செலுத்தும்

உற்பத்தி நிறுவனங்கள் 2% வரி செலுத்த வேண்டும்.

உணவு விடுதிகள்/ரெஸ்டாரண்ட்கள்: 5% வரி செலுத்தும்.

காலாண்டு கணக்குத் தாக்கல்:

ஆண்டு விற்பனை ரூ.1.5 கோடி வரை உள்ள நிறுவனங்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறை கணக்குத் தாக்கல் செய்தால் போதுமானது. முன்பு மாதாமாதம் கணக்குத் தாக்கல் செய்ய வேண்டியிருந்தது. ஆண்டு விற்பனை ரூ.1.5 கோடிக்கும் மேல் உள்ள நிறுவனங்கள் ஏற்கெனவே உள்ள முறை தொடரும்.

27 பொருட்கள் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது:

உலர்ந்த மாங்கனிக்கான வரி 12%லிருந்து 5% ஆகக் குறைப்பு

பிளெய்ன் சப்பாத்திக்களுக்கான வரி 5% ஆகக் குறைப்பு

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு உணவுப்பொட்டலங்களுக்கான வரி 18%-லிருந்து 5% ஆகக் குறைப்பு.

பிராண்ட் அல்லாத நொறுக்குத் தீனிகளுக்கான வரி 5% ஆகக் குறைப்பு

பிராண்ட் அல்லாத ஆயுர்வேத மருந்துகளுக்கான வரி 12%லிருந்து 5% ஆகக் குறைப்பு

பேப்பர் வேஸ்ட் வரி 12%லிருந்து 5% ஆகக் குறைப்பு

பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் வேஸ்ட் 18%லிருந்து 5% ஆகக் குறைப்பு

நூல் வரி 18% லிருந்து 12% ஆகக் குறைப்பு

மார்பிள், கிரானைட் நீங்கலாக தரைபோடப் பயன்படும் கற்களுக்கான வரி 28%லிருந்து 18% ஆகக் குறைப்பு.

ஸ்டேஷனரிப் பொருட்களில் பலவற்றுக்கு 28% இருந்த வரி விகிதம் இனி 18% ஆகக் குறைப்பு.

டீசல் இன்ஜின் பாகங்கள் வரி 18% ஆகக் குறைப்பு.

சேவைகள்- ஜாப் ஒர்க் - 12%-லிருந்து 5% ஆகக் குறைப்பு

உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார் அருண் ஜேட்லி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x