இந்தியர்கள் கிரெடிட் கார்டை வெளிநாடுகளில் பயன்படுத்துவதற்கான வரி 20% ஆக அதிகரிப்பு: மத்திய அரசு அறிவிப்பு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: இந்தியர்கள் தங்களது கிரெடிட் கார்டை வெளிநாடுகளில் பயன்படுத்துவதற்கான வரியை (TCS) 20 சதவீதமாக அதிகரித்துள்ளது மத்திய அரசு. ரிசர்வ் வங்கியுடன் கலந்து பேசிய பிறகு இந்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. வரும் ஜூலை 1-ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வர உள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அந்நிய செலாவணி மேலாண்மை (நடப்பு கணக்கு பரிவர்த்தனைகள் திருத்தம்) விதிகள், தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்பும் திட்டத்தின் (எல்ஆர்எஸ்) கீழ் சர்வதேச கிரெடிட் கார்டு பேமெண்ட்கள் உள்ளடங்கும் என நிதி அமைச்சகம் இந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

அரசின் இந்த அறிவிப்பு மக்கள் மற்றும் நிதி வல்லுநர்கள் மத்தியில் கவலை தரும் செய்தியாக அமைந்துள்ளது. இந்த அறிவிப்பு தொடர்பாக பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர். ‘நிச்சயம் இது வணிக ரீதியாக வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்பவர்களை பாதிக்க செய்யும்’ என தெரிவித்த பயனர் ஒருவர், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அதில் டேக் செய்துள்ளார். ‘இது ரொம்ப அதிகம்’, ‘அதிக வரி’ எனவும் பிற பயனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in