Published : 17 May 2023 02:53 PM
Last Updated : 17 May 2023 02:53 PM

“எனக்கு வருத்தமும் கோபமும்...” - பணிநீக்கத்துக்கு ஆளான அமேசான் இந்தியாவின் பெண் ஊழியர்

பிரதிநிதித்துவப் படம்

பெங்களூரு: இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் இந்தியாவில் சுமார் 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல். இதில் பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் ஒருவர் லிங்க்ட்இன் தளத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பெரு நிறுவனங்கள் ஊழியர்களை பெருமளவில் பணிநீக்கம் செய்து வரும் நடவடிக்கையை பின்பற்றி வருகின்றன. அந்த வகையில் அமேசான் இந்தியாவுக்கு பணியாற்றி வரும் இந்திய ஊழியர்கள் சுமார் 500 பேர் பணிநீக்க நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளனர். அமேசானின் பல்வேறு பிரிவு மற்றும் துறைகளை சேர்ந்த ஊழியர்கள் இந்த நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளனர்.

முன்னதாக, 18,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது அமேசான். தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் மேலும் சுமார் 9,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்தது அமேசான். அதன்படி தற்போது இந்த 500 பேர் நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

“எனது வேலை பறிபோனதை எண்ணி நான் மனம் வருந்துகிறேன். சக ஊழியர்களுடன் நான் கொண்டிருந்த உறவை இழந்துள்ளேன். இந்த நேரத்தில் எனக்கு கோபமும் வருகிறது. நிச்சயமற்ற சூழலில் எனது எதிர்காலம் உள்ளது. பணிநீக்க நடவடிக்கைக்கு என்னை போலவே பலரும் பாதிக்கப்பட்டு இருப்பீர்கள் என அறிவேன். இது ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இது கடினமான காலம். இதை நிச்சயம் நான் கடந்து செல்வேன். இந்நேரத்தில் எனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தின் ஆதரவு எனக்கு உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x