

புதுடெல்லி: இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் கார்களில் முன்புற இருக்கைகளில் அமர்ந்திருப்பவர்கள் சீட் பெல்ட் அணியாவிட்டால் அலாரம் ஒலிக்கும் வசதி நடைமுறையில் உள்ளது.
இந்த அலாரம் ஒலிப்பதை நிறுத்தி வைக்கும் சாதனங்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகின்றன.
இதையடுத்து அந்த சாதனங்களை விற்பனைப் பட்டியலில் இருந்து நீக்க இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டது.
அதன்படி, அமேசான், பிளிப்கார்ட், மீஸோ, ஸ்னாப்டீல், ஷாப்க்ளூஸ் உள்ளிட்ட 5 இ-காமர்ஸ் நிறுவனங்கள் அவற்றின் தளங்களில் இருந்து 13,118 சீட் பெட் அலாரம் நிறுத்த சாதனங்களை நீக்கியுள்ளன. அதிகபட்சமாக அமேசான் தளத்திலிருந்து 8,095, பிளிப்கார்ட்டிலிருந்து 5,000 சீட் பெல்ட் அலாரம் நிறுத்த சாதனங்கள் விற்பனைப் பட்டியலிருந்து நீக்கப்பட்டுள்ளன.