50-வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு நிப்போ பேட்டரி புதிய லோகோ அறிமுகம்

50-வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு நிப்போ பேட்டரி புதிய லோகோ அறிமுகம்
Updated on
1 min read

சென்னை: ஜப்பானைச் சேர்ந்த மட்சுஷிதா எலக்ட்ரிக் இண்டஸ்ட்ரியல் நிறுவனத்துடன் இணைந்து இந்தோநேஷனல் என்னும் நிறுவனத்தை தொழிலதிபர் பி.ஓபுல் ரெட்டி 1972-ம் ஆண்டு தொடங்கினார். பின்னர் முதல் தொழிற்சாலை 1973-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் நெல்லூரில் தொடங்கப்பட்டது. முதல் தயாரிப்பான நிப்போ பேட்டரிகள் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. உயர் செயல்திறன்,குறைந்த விலை காரணமாக கிராமப்புற மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

கடந்த 50 ஆண்டுகளாக இந்திய சந்தையில் சிறப்பான முத்திரையை நிப்போ பதித்து வருகிறது. வாடிக்கையாளர்களின் தேவையை கருத்தில் கொண்டு டார்ச் லைட்டுகள், கொசு விரட்டும் பேட்டுகள், எல்இடி விளக்குகள் மற்றும் மின்சார பொருட்கள் ஆகியவற்றை விற்பனை செய்துவருகிறது. வணிக விரிவாக்க முயற்சியில், கைனகோ லிமிடெட் நிறுவனத்தில் முதலீட்டுகளை செய்து ரயில்வே, ராணுவ மற்றும் விமானம் சார்ந்த பாகங்களின் உற்பத்தியிலும் இந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் பொன்விழா சாதனையை கொண்டாடும் விதமாக இந்தோ நேஷனல் நிறுவனம் நிப்போ பிராண்டுக்கான புதிய லோகோவை அறிமுகம் செய்துள்ளது.

இதுகுறித்து நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் ஆதித்யா ரெட்டி கூறும்போது, இந்த ஆண்டு நிப்போவின் பொன்விழா ஆண்டு, இந்த 50-வது ஆண்டு கால கொண்டாட்டத்தில் நாங்கள் இப்போது ஒரு புதிய மற்றும் அற்புதமான கட்டத்தில் நுழைய இருக்கிறோம், அதாவதுபுதிய இந்தியாவின் தேவைகளைப் பூர்த்தி செய்ய தயாராக இருக்கிறோம் என்றார். அதேபோல் நிர்வாக இயக்குநர் துவாரக்நாத் ரெட்டி கூறும்போது நிறுவனத்தின் 50-வது ஆண்டை கொண்டாடுவதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். எங்களின் நிப்போ பிராண்ட் வரும் காலங்களில் இன்னும் புதிய உயரங்களை எட்டும் என தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in