Published : 13 May 2023 06:36 AM
Last Updated : 13 May 2023 06:36 AM
சென்னை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘தமிழ்நாடு பிராப்பர்ட்டி கண்காட்சி 2023’ என்ற வீட்டு வசதி கண்காட்சி நேற்று தொடங்கியது. நாளை வரை இக்கண்காட்சி நடைபெறுகிறது. பொதுமக்களுக்கு வீடு வாங்கும் கனவை ஒரே இடத்தில் நனவாக்கும் வகையில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வீட்டுவசதி கண்காட்சியை அவ்வப்போது நடத்தி வருகிறது.
அந்த வரிசையில் தற்போது நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில், ‘இந்து தமிழ் திசை’ மற்றும் ‘ஐ ஆட்ஸ் அண்ட் ஈவென்ட்ஸ்’ (I ads & events) இணைந்து நடத்தும் ‘தமிழ்நாடு பிராப்பர்ட்டி கண்காட்சி- 2023’ என்ற வீட்டு வசதி கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.
நேற்று தொடங்கிய இக்கண்காட்சி நாளை (மே 14) வரை தொடர்ந்து 3 நாட்கள் காலை 10 மணி முதல் இரவு 7 மணிவரை நடைபெறுகிறது. நடிகை ரம்யா ராமகிருஷ்ணன், திரைப்பட நடிகர் ரியோ ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று இக்கண்காட்சியைத் தொடங்கி வைத்தனர். கண்காட்சி குறித்து நடிகை ரம்யா ராமகிருஷ்ணன் கூறுகையில், ``வீடு வாங்குவது என்பது அனைவருக்கும் கனவாகவும், லட்சியமாகவும் உள்ளது. அதை நிறைவேற்றும் வகையில் இக்கண்காட்சி அமைந்துள்ளது.
மக்கள் மத்தியில் நம்பிக்கைப் பெற்றுள்ள `இந்து தமிழ் திசை' நாளிதழ் இக்கண்காட்சியை நடத்துவதால், பொதுமக்களுக்கு மேலும் நம்பிக்கை அதிகரிக்கும். வீடு, மனைகளைத் தேர்வு செய்வதுடன் அவற்றை வாங்கத் தேவையான நிபுணர்களின் ஆலோசனை, வங்கிக் கடன் உள்ளிட்டவை ஒரே இடத்தில் கிடைப்பதால் இக்கண்காட்சி அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்'' என்றார்.
கண்காட்சி குறித்து நடிகர் ரியோ ராஜ் கூறுகையில், ``வீடு, மனை உள்ளிட்ட சொத்துகளை வாங்க விரும்புவோர் அதைத் தேடிச் செல்லாமல் இக்கண்காட்சிக்கு வந்தால் போதும், அவர்களுக்குத் தேவையானவற்றைத் தேர்வு செய்யலாம். மேலும் வீடுகள், மனைகள் போன்றவற்றை அதிக பணம் முதலீடு செய்து வாங்குவதால் மக்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் எழும்.
அவற்றுக்கு இக்கண்காட்சியில் விடை கிடைக்கும்'' என்றார். இந்த பிரம்மாண்ட வீட்டுவசதி கண்காட்சியில் பல முன்னணி நிறுவனங்களின் வீடுகள், மனைகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள்,தனி வில்லாக்கள், பண்ணை வீடுகள் எனப் பலவிதமான பிராப்பர்ட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், வீட்டுக் கடன் தரும் வங்கிகளும் இந்தக் கண்காட்சியில் பங்கேற்றுள்ளன. வீடு வாங்க நினைப்பவர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் இக்கண்காட்சி ஒரு நல்ல வாய்ப்பாகும். இதில் பங்கேற்றுள்ள கட்டுநர்கள் மற்றும் புரமோட்டர்களுடன் வாடிக்கையாளர்கள் நேரடியாகக் கலந் துரையாடி தங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம்.
இந்தக் கண்காட்சிக்கு அனுமதி இலவசம். இந்தக் கண்காட்சியில் வாசகர்கள் வசதிக்காக, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ஸ்டால் அமைக்கப்பட்டுள்ளது. அங்கே மாத மற்றும் ஆண்டுச் சந்தாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT