

மும்பை: பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் காலை 09:54 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 205.03 புள்ளிகள் சரிவடைந்து 61,699.49 ஆக இருந்தது.
மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் இன்று (வெள்ளிக்கிழமை) சரிவுடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 139 புள்ளிகள் சரிவடைந்து 61,772 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 34 புள்ளிகள் சரிந்து 18,262 ஆக இருந்தது. பங்குச்சந்தைகளில் இந்த வார இறுதி நாள் வர்த்தகம் சரிவுடனே தொடங்கியது. காலை 09:54 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 205.49 புள்ளிகள் சரிவடைந்து 61,699.49 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 93.00 புள்ளிகள் சரிந்து 18,204.00 ஆக இருந்தது. உலகளாவிய சந்தைகளின் பாதகமான போக்கு, ஏப்ரல் மாத நுகர்வோர் பணவீக்க தரவுகளுகளின் வருகைக்காக முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் காத்திருக்கும் காரணத்தால் இந்திய பங்குச்சந்தைகளின் இன்றைய வர்த்தகம் வீழ்ச்சியுடன் தொடங்கின.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை எம் அண்ட் எம், டாடா மோட்டார்ஸ், மாருதி சுசூகி, டைட்டன் கம்பெனி, ஆக்ஸிஸ் பேங்க், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஹிந்துஸ்தான் யுனிலீவர் பங்குகள் உயர்வில் இருந்தன. டாடா ஸ்டீல், ஏசியன் பெயின்ட்ஸ், இன்போசிஸ், எல் அண்ட் டி, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், என்டிபிசி, டெக் மகேந்திரா, இன்டஸ்இன்ட் பேங்க், விப்ரோ, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்குகள் சரிவில் இருந்தன.