

புதுடெல்லி: கோத்ரேஜ் & பாய்ஸ் நிறுவனத்தின் பிரிவான கோத்ரேஜ் எலக்ட்ரிக்கல்ஸ் அண்டு எலக்ட்ரானிக்ஸ் மின் பரிமாற்றம், ரயில்வே மற்றும் சோலார் திட்டங்களை நிறைவேற்றுவதற்காக ரூ.2,000 கோடி மதிப்பிலான ஆர்டரைப் பெற்றுள்ளது.
இதன் மூலம் நாடு முழுவதும் 400 கேவி, 765 கேவி-ன் இஎச்வி துணை மின் நிலையங்களுக்கான பொறியியல் கொள்முதல் கட்டுமானத்தையும் (இபிசி), மும்பையில் 200 கேவி நிலத்தடி கேபிள் கொண்ட ஜிஎஸ்எஸ் துணைநிலையத்தையும் மற்றும் நேபாளத்தில் 132 கேவி துணை மின் நிலைய திட்டத்தையும் கோத்ரேஜ் செயல்படுத்தவுள்ளது. சோலார் பிரிவில் மேற்கு வங்கத்தில் 20 மெகாவாட் சூரிய மின்சக்தி ஆலைக்கான ஆர்டரையும் இந்நிறுவனம் பெற்றுள்ளது.
அடுத்த மூன்று ஆண்டுகளில் சோலார் இபிசி தொகுப்பு ஆண்டுதோறும் 30 சதவீத வளர்ச்சி இலக்கினை எட்ட இந்த ஆர்டர் மிகப்பெரிய உதவியாக இருக்கும்.
இந்திய ரயில்வேயில் இருந்து ரூ.900 கோடி ரூபாய்க்கு இழுவை துணை மின்நிலையங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பணிகளுக்கான திட்டத்துடன் ரயில்வே மின்மயமாக்கலில் இணைந்து செயல்படவுள்ளதாக கோத்ரேஜ் தெரிவித்துள்ளது.