கடந்த ஏப்ரல் மாதத்தில் பங்கு சார்ந்த பரஸ்பர நிதி முதலீடு 68% சரிவு

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

மும்பை: கடந்த ஏப்ரல் மாதத்தில் பங்குச்சந்தை சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களின் முதலீடு 68% சரிந்துள்ளது.

இது தொடர்பாக இந்திய பரஸ்பர நிதி சங்கம் (ஆம்ஃபி) வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியிருப்பதாவது: கடந்த ஏப்ரல் மாதத்தில் பங்குச் சந்தை சார்ந்த பரஸ்பரநிதி திட்டங்களின் முதலீடுரூ.6,480.3 கோடியாக உள்ளது. இது முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது 68% குறைவு ஆகும்.

இதுபோல ஏப்ரல் மாதத்தில் மாதாந்திர முதலீட்டு திட்டம் (எஸ்ஐபி) மூலம் ரூ.13,727.63 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது மார்ச் மாதத்தின் ரூ.14,276.06 கோடியைவிட குறைவு ஆகும். இது நடப்பு நிதியாண்டின் இறுதியில் ரூ.17 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும்.

ஒட்டுமொத்த எஸ்ஐபி எண்ணிக்கை மார்ச் 31 நிலவரப்படி 6.36 கோடியாக இருந்தது. இது ஏப்ரல் 30 நிலவரப்படி 6.42 கோடியாக அதிகரித்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில் சென்செக்ஸ் 3.6%, நிப்டி 4.06% அதிகரித்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆம்ஃபி தலைமை செயல் அதிகாரி என்.எஸ்.வெங்கடேஷ் கூறும்போது, “ஏப்ரல் மாதத்தில் விடுமுறை நாட்கள் அதிகம் வந்ததால் எஸ்ஐபி முதலீடு குறைந்தது. மே மாதத்தில் இது ரூ.14,000 கோடியைத் தாண்டும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in