ஆயுள் காப்பீட்டுடன் கூடிய தொடர் வைப்பு திட்டம்: சென்ட்ரல் வங்கி அறிமுகம்

ஆயுள் காப்பீட்டுடன் கூடிய தொடர் வைப்பு திட்டம்: சென்ட்ரல் வங்கி அறிமுகம்
Updated on
1 min read

சென்னை: ஆயுள் காப்பீட்டுடன் கூடிய தொடர் வைப்பு திட்டத்தை சென்ட்ரல்பாங்க் ஆஃப் இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது. `சென்ட் சுரக்ஷித் சம்ரிதி' என்றபெயரில் புதிய தொடர்பு வைப்புதிட்டத்தை சென்ட்ரல் பாங்க்ஆஃப் இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது.

18 முதல் 50 வயதுக்குஉட்பட்ட வருவாய் ஈட்டும் தனிநபர்களுக்காக பிரத்யேகமாக இப்புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சேருபவர்களுக்குத் திட்டம் முதிர்வடையும் வரை தவணைத் தொகையின் 100 மடங்கு தொகை அளவுக்கு ஆயுள் காப்பீடு கிடைக்கும்.

புதிய சென்ட் சுரக்ஷிஷித் சம்ரிதிதொடர் வைப்பு திட்டத்தில் 84 மாதங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் அசல் தவணையாகச் செலுத்த வேண்டும். மேலும்ரூ.10 ஆயிரம் மடங்கில் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை தவணைசெலுத்த முடியும். டெபாசிட்தாரரின் ஆயுள் காப்பீட்டுத் தொகைக்கான பிரீமியம் வங்கியால் ஏற்கப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in