கார், இருசக்கர வாகன விற்பனை ஏப்ரலில் சரிவு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: மோட்டார் வாகன விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பு (எப்ஏடிஏ) நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த ஏப்ரல் மாதத்தில் கார் விற்பனை 8 மாதங்களுக்குப் பிறகு முதன்முறையாக வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கார் விற்பனை 2022 ஏப்ரலுடன் ஒப்பிடும்போது 1% குறைந்து 2,82,674 ஆக உள்ளது. இருசக்கர வாகன விற்பனைக்கான பதிவும் கடந்தாண்டு ஏப்ரலில் 13,26,773 ஆக காணப்பட்ட நிலையில் நடப்பாண்டு ஏப்ரலில் 7% குறைந்து 12,29,911 ஆனது. அதேநேரம், 3 சக்கர வாகனம், டிராக்டர் மற்றும் வர்த்தக வாகன விற்பனை ஏப்ரல் மாதத்தில் அதிகரித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in