

சென்னை: சோழா எம்எஸ் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மொத்த பிரிமீயம் 2022-23 நிதி ஆண்டில் ரூ.6,200 கோடியாக உயர்ந்துள்ளதாகவும், முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் 27.6 சதவீத வளர்ச்சி என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சோழ மண்டலம் எம்எஸ் இன்சூரன்ஸ் நிறுவனமானது முருகப்பா குழுமம் மற்றும் ஜப்பானின் மிட்சூய் சுமிடோமா இன்சூரன்ஸ் குழுமத்தின் கூட்டு நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் வரிக்கு முந்தைய வருவாய் 2022-23 நிதி ஆண்டில் ரூ.264 கோடியாக உள்ளது. அதற்கு முந்தைய நிதி ஆண்டில் இது ரூ.106 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் நிகர மதிப்பு ரூ.2,160 கோடியாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.