இந்திய வங்கிகள் நல்ல நிலையில் உள்ளன: ரிசர்வ் வங்கி கவர்னர் தகவல்

இந்திய வங்கிகள் நல்ல நிலையில் உள்ளன: ரிசர்வ் வங்கி கவர்னர் தகவல்
Updated on
1 min read

புதுடெல்லி: கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவில் எஸ்விபி வங்கி மற்றும் சிக்னேச்சர் வங்கி நிதி நெருக்கடியால் மூடப்பட்டன. எஸ்விபி வங்கி அமெரிக்க அரசின் கடன்பத்திரங்களில் பெருமளவில் முதலீடு செய்திருந்தது.

அந்தக் கடன் பத்திரங்களின் மதிப்பு சரிந்த நிலையில் அவ்வங்கி இழப்பைச் சந்தித்தது. அதேபோல் சுவிட்சர்லாந்தை தலைமையிடமாகக் கொண்ட உலகின் முன்னணி வங்கிகளில் ஒன்றான கிரெடிட்சூயிஸ் வங்கியும் தற்போது தீவிரநிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இந்தச் சூழலில் இந்திய வங்கிகள் பாதுகாப்பாக இருப்பதாக சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

நெருக்கடிக்கு மத்தியிலும்... இது குறித்து மேலும் அவர் கூறுகையில், “ சமீபத்தில் வளர்ந்தநாடுகளில் வங்கிகள் நெருக்கடிக்குஉள்ளாகின. ஆனால், அந்தநெருக்கடியால் இந்திய வங்கிகள்எந்தப் பாதிப்பையும் எதிர்கொள்ளவில்லை. இந்திய வங்கிகள் நல்ல நிலையில் உள்ளன. தீவிரநெருக்கடிச் சூழலிலும் தாக்குப்பிடிக்கும் வகையில் இந்திய வங்கிகளின் கட்டமைப்பு உள்ளது. இதை மேலும் வலுப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in