

மும்பை: ரிலையன்ஸ் குழுமத்தில் 40 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் ஊழியர் ஒருவருக்கு அக்குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி ரூ.1,500 கோடி மதிப்பிலான வீட்டை பரிசாக வழங்கியுள்ளார்.
முகேஷ் அம்பானியும் மனோஜ் மோடியும் ஒரே கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். ரிலையன்ஸ் நிறுவனத்தில் மனோஜ் மோடி 40 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். தற்போது அவர் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடெயில் ஆகிய இரு நிறுவனங்களின் இயக்குநராக உள்ளார். இந்நிலையில், இந்தப் பின்புலத்திலேயே மனோஜ் மோடிக்கு முகேஷ் அம்பானி ரூ.1,500 கோடி மதிப்பிலான வீட்டை பரிசாக வழங்கியுள்ளார். 1.7 லட்சம் சதுர அடியில் அமைந்துள்ள இந்த வீடு 22 மாடிகளைக் கொண்டுள்ளது. இந்த வீடு மும்பையில் நேபியன் கடல் சாலையில் அமைந்துள்ளது.