அட்சய திருதியைக்கு 2 நாட்களில் கோவையில் 80 கிலோ தங்கம் விற்பனை

அட்சய திருதியைக்கு 2 நாட்களில் கோவையில் 80 கிலோ தங்கம் விற்பனை
Updated on
1 min read

கோவை: அட்சய திருதியை தினம் கடந்த 22, 23-ம் தேதிகளில் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, கோவையில் அனைத்து நகை கடைகளிலும் வியாபாரம் மும்முரமாக நடைபெற்றது. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு சிறப்பு தள்ளுபடிகள் வழங்கப்பட்டன. மொத்த வணிகம் சிறப்பாக இருந்தபோதும் கடந்தாண்டை விட 20 சதவீதம் குறைந்துள்ளதாக நகை தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.

கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முத்து வெங்கட்ராமன் கூறும்போது, “பல ஆண்டுகளுக்கு பின் இந்தாண்டு அட்சய திருதியை இரண்டு நாட்கள் கடைபிடிக்கப்பட்டது. கோவையில் மொத்தம் 80 கிலோ எடையிலான தங்கம் விற்பனை செய்யப்பட்டது.

விலை அதிகரித்துள்ள காரணத்தால் குறைந்த கிராம்களில் தங்க நகைகளை வாங்குவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டினர். கடந்தாண்டு 100 கிலோ எடையிலான தங்கம் விற்பனை செய்யப்பட்டது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in