Published : 23 Apr 2023 04:05 AM
Last Updated : 23 Apr 2023 04:05 AM

அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு நல்லி ஜுவல்லர்ஸின் புதிய நகைகள் அறிமுகம்

சென்னை: அட்சய திருதியை முன்னிட்டு பிரத்தியேகமாக வடிமவைக்கப்பட்ட புதிய வகை நகைகளை நல்லி ஜுவல்லர்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

வாடிக்கையாளர்களை கவரும் வகையிலான ஆரம், நெக்லஸ், ஜிமிக்கி காதணி, ஒட்டியாணம், வாங்கி மற்றும் நெத்தி சுட்டி போன்ற பழங்கால நகைகளும் திருமண மற்றும் பண்டிகையின்போது அணியும் தற்காலத்துக்கு ஏற்றபடியாக வடிவமைக்கப்பட்ட நகைகளும் நல்லி ஜுவல்லர்ஸ் ஏற்கெனவே அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த வரிசையில் இந்த அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு ஆரம், நெக்லஸ், வளையல், ஜிமிக்கி ஆகியவற்றின் புதிய தொகுப்பு அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இதன் மொத்த எடை சுமார் 80 கிராம் ஆகும். மேலும் 12 கிராம் முதல் எலக்ட்ரோபார்மிங் முறையில் உருவாக்கப்பட்ட கருப்பு நூல் நெக்லஸ் மற்றும் குண்டு மாலை.

பந்துகளுடன் கூடிய சிறப்பு கட்டிங் செய்யப்பட்ட செயற்கை பச்சை மணிகள், சிறப்பு வேலைப்பாடுடன் கூடிய யானை நெக்லஸ் செட். குறைந்த எடையிலான காதணிகள், ஜிமிக்கிகள் மற்றும் லைட் வெயிட் கலெக்‌ஷன்களில் தங்கச் சங்கிலியுடன் கூடிய பிரத்யேக ஈவில் ஐ பென்டன்ட் வகை நகைகள், சார்ம் பிரேஸ்லெட், முத்து மாலை, பதக்கத்துடன் கூடிய பிரத்யேக பெரிய அளவிலான முத்து காதணிகள், குறைந்த எடை வளையல்கள் மற்றும் நெக்லஸ்கள் ஆகியவை தற்போது அறிமுகப்படுத்துப்பட்டுள்ளன.

மேலும் மஞ்சள் மற்றும் பழங்கால பாலிஷ் ஆரம், நெக்லஸில் சிறப்பு வகைகள், காஸ்டிங் காதணிகளுடன் வடிவமைக்கப்பட்ட நகைகள், வைர நகைகளான நெக்லஸ், காதணிகள், மோதிரம் மற்றும் குறைந்த எடை வளையல் உள்ளிட்டவை தற்போதைய அட்சய திருதியை நாளில் நல்லி ஜுவல்லர்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x