

பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் இயக்குநர் குழுவில் குறைந்தபட்சம் ஒரு பெண் இயக்குநராக இருக்க வேண்டும் என்று செபி புதிய விதிமுறையை உருவாக்கியது. அக்டோபர் 1-ம் தேதி வரை இதற்கான காலக்கெடுவை செபி நிர்ணயம் செய்தது.
தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் 1,492 நிறுவனங்களில் 904 நிறுவனங்களில் பெண் இயக்குநர்கள் இல்லை. அதாவது தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் 62 சதவீத நிறுவனங்களில் பெண் இயக்குநர்கள் இல்லை.
இந்த உத்தரவை கடந்த பிப்ரவரியில் செபி விதித்தது. அதிலிருந்து கடந்த ஜூன் மாதம் 30-ம் தேதி முடிய 94 நிறுவனங்களில் 91 பெண் இயக்குநர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டிருகின்றன.
பெரும்பாலான பெண் இயக்குநர்கள் அந்த நிறுவன மேம்பாட்டாளர்களின் குடும்பங் களிலிருந்தே நியமிக்கப்பட்டிருக் கிறார்கள். சமீபத்தில் முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி ரிலையன்ஸ் இயக்குநர் குழுவில் இணைந்தார். இதேபோல கிர்லோஸ்கர் ஆயில் இன்ஜின்ஸ், ஏசியன் பெயின்ட்ஸ், ஆகிய நிறுவனங்கள் குடும்பத்தினரை இயக்குநர்களாக நியமித்தனர்.