

பெங்களூரு: பாக்கெட் உணவுப் பொருள் பிரிவில் சென்ற ஆண்டு விப்ரோ கன்ஸ்யூமர் கேர் அண்ட் லைட்டிங் நிறுவனம் கால்பதித்தது. அதையடுத்து சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் மசாலா பொருட்களை விற்பனை செய்யும் கேரளாவைச் சேர்ந்த நிராபரா நிறுவனத்தை வாங்கியது. இந்நிலையில் தற்போது மற்றொரு கேரள நிறுவனமான பிராமின்ஸ் நிறுவனத்தை வாங்க விப்ரோ ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
1987-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பிராமின்ஸ் நிறுவனம் ரெடி டு குக், மசாலா, ஊறுகாய், கோதுமை உட்பட பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும் சைவ உணவுப் பொருள்களை விற்பனை செய்துவருகிறது.
இந்நிலையில், உணவுப் பொருள் பிரிவில் தனது சந்தையை விரிவாக்கும் நோக்கில் விப்ரோ இந்நிறுவனத்தை வாங்குகிறது. விப்ரோ கன்ஸ்யூமர் கேர் அண்ட் லைட்டிங் நிறுவனம் 2022-23 நிதி ஆண்டில் ரூ.10 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டியது குறிப்பிடத்தக்கது.