ஏப்.20, 2023 | தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு

ஏப்.20, 2023 | தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு
Updated on
1 min read

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்.20) சவரனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.45,200 -க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த வாரத்தில் ஏற்ற இறக்கம் கண்டு வந்த தங்கம் விலை இரண்டு நாட்களாக மாற்றமின்றி இருந்து வந்தது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (வியாழக்கிழமை) கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.5,650-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.45,200-க்கு விற்பனையாகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.48,480-க்கு விற்பனையாகிறது. இதேபோல், ஒரு கிராம் வெள்ளி ரூ.81.00-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.81,000-ஆக இருக்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in