Published : 17 Apr 2023 04:07 AM
Last Updated : 17 Apr 2023 04:07 AM

நீலகிரி மாவட்டத்தில் தொழில் தொடங்க மானியத்தில் வங்கிக் கடன்

ஆட்சியர் அம்ரித் | கோப்புப் படம்

உதகை: நீலகிரி மாவட்டத்தில் புதிதாக தொழில் தொடங்க 30 சதவீத மானியத்தில் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று, ஆட்சியர் சா.ப.அம்ரித் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: உலக வங்கி நிதி உதவியுடன் ஊரக பகுதிகளில் வறுமை ஒழிப்பு, ஊரக தொழில் மேம்பாடு, நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் என்ற நோக்கத்தின் அடிப்படையில் நீலகிரி மாவட்டத்தில் ‘வாழ்ந்து காட்டுவோம்' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன்மூலமாக, ஊரக சமுதாயத்தில் வளம் மற்றும்நிலைத்த உயர்வை உருவாக்கிபெரும் மாற்றத்தை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலமாக, ஊரக பகுதிகளிலுள்ள தனிநபர் தொழில்முனைவோர், ரூ.15 லட்சத்துக்கு மேல் திட்ட மதிப்பீட்டில் புதிய தொழில் தொடங்குவதற்கும் அல்லது ஏற்கெனவே செய்து வரும் தொழிலை மேம்படுத்துவதற்கும் வங்கிகள் மூலமாக, திட்ட மதிப்பீட்டில் 30 சதவீதம் மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்படுகிறது.

இதற்கான ஊரக பகுதிகளிலுள்ள தகுதியான பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்திட்டத்தில் பயன்பெற 25 முதல் 45 வரை வயது இருக்க வேண்டும். விண்ணப்பதாரர், ஊரகப் பகுதியில் இருக்க வேண்டும். மேலும், அவரது குடும்ப உறுப்பினர் மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருக்க வேண்டும். சுய உதவிக் குழு வங்கி கடன் பெற்றிருந்தால் முறையாக திருப்பி செலுத்தியிருக்க வேண்டும்.

சிறப்பு பிரிவினராக இருந்தால் திட்ட மதிப்பீட்டில் 5 சதவீதமும், இதர பிரிவினராக இருந்தால் 10 சதவீதமும் சொந்த பங்களிப்பு இருக்க வேன்டும். மேலும் பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், விவரங்களுக்கு 9677916552, 9578779904 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x