Published : 15 Apr 2023 11:06 AM
Last Updated : 15 Apr 2023 11:06 AM

ஏப்.15, 2023 | தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு

கோப்புப்படம்

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்.15) சவரனுக்கு ரூ.560 குறைந்து, ரூ.45,200-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த வாரத்தில் ஏற்ற இறக்கம் கண்டு வந்த தங்கம் விலை, நேற்று (வெள்ளிக்கிழமை) சவரன் 45,760-க்கு விற்பனையாகி புதிய உச்சம் தொட்டிருக்கிறது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (சனிக்கிழமை) கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.5,650-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.45,200-க்கு விற்பனையாகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.48,912-க்கு விற்பனையாகிறது. இதேபோல், வெள்ளி விலை ரூ.1.50 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.81.50-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.81,500-ஆக இருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x