Published : 14 Apr 2023 07:40 AM
Last Updated : 14 Apr 2023 07:40 AM
புதுடெல்லி: ஆண்டுக்கு ரூ.100 கோடிக்கு மேல்வருவாய் ஈட்டும் நிறுவனங்கள் 7 நாட்களுக்குள் அதன் இ -இன்வாய்ஸ் ரசீதுகளை இன்வாய்ஸ் பதிவு தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று ஜிஎஸ்டி நெட்வொர்க் தெரிவித்துள்ளது. வரும் மே 1 முதல் இது நடைமுறைக்குவருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நிறுவனங்கள் வரி சலுகைகளை பெறுவதற்கு அதன் பரிமாற்றம் தொடர்பான இன்வாய்ஸ்களை பதிவேற்றம் செய்வது அவசியம். தற்போது நிறுவனங்கள் அதன் இ-இன்வாய்ஸ்களை உடனுக்குடன் பதிவேற்றம் செய்வதில்லை.
இந்நிலையில், இன்வாய்ஸ்களை பதிவேற்றம் செய்வதற்கு காலக்கெடுவை கொண்டுவரும் நோக்கில் மத்திய அரசுஇந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக ஜிஎஸ்டி நெட்வொர்க் தெரிவித்துள்ளது.
இதன்படி மே 1-ம் தேதி முதல், ஆண்டுக்கு ரூ.100 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டும் நிறுவனங்கள் தங்கள் இ-இன்வாய்ஸ்களை 7 நாட்களுக்குள் இன்வாய்ஸ் பதிவு தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். 7 நாட்கள் கடந்துவிட்டால் அந்த இன்வாய்ஸ்களை பதிவேற்றம் செய்ய முடியாது.
தற்போதைய விதிப்படி ரூ.10 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டும்நிறுவனங்கள் தங்கள் பரிவர்த்தனைக்கான இ- இன்வாய்ஸ்களை உருவாக்க வேண்டும். தற்போது ரூ.100 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டும் நிறுவனங்கள் 7 நாட்களுக்கு அதை பதிவேற்றம் செய்ய வேண்டும். படிப்படியாக இந்த நடைமுறை அனைத்து தரப்புக்கும் கட்டாயமாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT