உலகின் மிக வலிமையான டயர் பிராண்ட் பட்டியலில் 2 - வது இடத்தில் எம்ஆர்எஃப்

உலகின் மிக வலிமையான டயர் பிராண்ட் பட்டியலில் 2 - வது இடத்தில் எம்ஆர்எஃப்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் எம்ஆர்எஃப் நிறுவனம் உலகளவில் வலிமை வாய்ந்த டயர்பிராண்ட் பட்டியலில் 2-வது இடத்தைப் பிடித்துள்ளது என பிராண்ட் பைனான்ஸ் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வலிமையான டயருக்கான அனைத்து அளவீட்டு சோதனைகளிலும் எம்ஆர்எஃப் அதிகபட்ச மதிப்பெண்ணை தக்க வைத்துள்ளது. மேலும், உலக அளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் முன்னணி பிராண்டாகவும் எம்ஆர்எஃப் உருவெடுத்துள்ளது.

பிராண்ட் வலிமைக்கான 100 மதிப்பெண்களில் இந்நிறுவனம் 83.2 சதவீத மதிப்பெண்ணைப் பெற்று பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

முதலிடத்தில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மிச்செலின் நிறுவனமும், மூன்றாவது இடத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த குட்இயர் நிறுவனமும் உள்ளன. எம்ஆர்எஃப் நிறுவனத்துக்கு AAA பிராண்ட் தரநிலை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in