Published : 05 Sep 2017 10:25 AM
Last Updated : 05 Sep 2017 10:25 AM

குழந்தையாக அமெரிக்கா வந்தவர்களின் பணி உரிமையை ரத்து செய்ய முடிவு: 7,000 இந்தியர்களுக்கு பாதிப்பு

வாஷிங்டன்குழந்தையாக இருக்கும்போது குடும்பத்தினரால் அமெரிக்கா அழைத்து வரப்பட்டவர்களுக்கு வேலை செய்யும் அனுமதியை ரத்து செய்ய அதிபர் டொனால்டு ட்ரம்ப் முடிவெடுத்துள்ளார். 

அமெரிக்காவுக்கு வருபவர்கள் பலர் தங்களுடைய குழந்தைகளையும் அழைத்து வருகின்றனர். அவர்கள் வளர்ந்த பின்னர் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களாக கருதப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றும் நிலை ஏற்பட்டது. இதனால் 2012-ம் ஆண்டு ‘டிபர்ட் ஆக் ஷன் பார் சைல்ட்ஹுட் அரைவல்ஸ்’ (டிஏசிஏ) என்ற திட்டத்தை முன்னாள் அதிபர் ஒபாமா கொண்டு வந்தார்.

இத்திட்டத்தின்படி குழந்தைகளாக வந்தவர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படுவதில் இருந்து தற்காலிக பாதுகாப்பு பெற விண்ணப்பிக்கலாம். ஆனால், அவர்கள் சட்டப்பூர்வமாக குடியுரிமை பெற்றவர்களாக கருதப்பட மாட்டார்கள். எனினும், அமெரிக்காவில் அவர்கள் சட்டப்பூர்வமாக வேலை செய்ய அனுமதிக்கப்படுவார்கள். குழந்தைகளாக வந்து தற்போது எந்தவித குடியுரிமை ஆவணங்களும் இல்லாமல் இருக்கும் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நாடு கடத்தப்படாமல் வேலை செய்வதற்கும் அனுமதி கிடைக்கும் என்ற கனவுடன் இருந்தனர்.

அமெரிக்காவுக்கு குழந்தைகளாக சென்ற இந்தியர்கள் 7,000-க்கும் மேற்பட்டோர் வாழ்கின்றனர். அதிபர் ட்ரம்ப் முடிவால் அவர்கள் நாட்டில் இருந்து வெளியேற்றப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்க ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x