

புதுடெல்லி: செபி வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. ஜீ என்டர்டெயின்மென்ட் பங்குச் சந்தையில் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த நிறுவனத்தைச் சேர்ந்த பிஜல் ஷா, கோபால் ரிடோலியா மற்றும் ஜதின் சாவ்லா ஆகிய 3 பேர் பங்குச் சந்தை வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட 2 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.
மேலும், விதிமுறைகளை மீறிசெயல்பட்டதற்காக அந்த நிறுவனத்துக்கு ரூ.90 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இதனை அந்த மூன்று பேரும் 45 நாட்களுக்குள் செலுத்த வேண்டும்.
ரிட்டோலியா மற்றும் சாவ்லா ஆகியோர் முறையே ரூ.7.52 கோடி மற்றும் ரூ.2.09 கோடி வரைபெற்ற சட்ட விரோத ஆதாயங்களை வட்டியுடன் சேர்த்து திரும்பப் பெறப்பட வேண்டும். இவ்வாறு செபி தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
செபியின் தடை உத்தரவையடுத்து பிஜல் ஷா, கோபால் ரிடோலியா மற்றும் ஜதின் சாவ்லா ஆகிய இந்த மூன்று பேரும் பங்குச் சந்தை நடவடிக்கையில் ஈடுபட முடியாது.