

பொதுமக்களிடையே சேமிப் பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இந்திய தொழிலக கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) தெரிவித்திருக்கிறது.
தற்போதைய சூழ்நிலையில் பொதுமக்களின் சேமிப்பை குறைக்கும் எந்த நடவடிக்கை எடுத்தாலும் உள்நாட்டு சேமிப்பு குறையும். அதனால் வெளிநாட்டு முதலீடுகளை சார்ந்து இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். என்று சி.ஐ.ஐ. தலைமை இயக்குநர் சந்திரஜித் பானர்ஜீ தெரிவித்தார்.
நீண்ட கால சேமிப்புக்கு ஊக்கம் கொடுப்பதன் மூலம் கட்டுமானப் பணிகளுக்கு தேவையான நிதியை திரட்ட முடியும் என்றும் இது பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்றும் கூறினார். மொத்த உள்நாட்டு சேமிப்பு 2007-08ம் ஆண்டு ஜி.டி.பியில் 36.80 சதவீதமாக இருந்தது. ஆனால் 2012-13ம் ஆண்டு 30.1 சதவீதமாக குறைந்தது.