சென்செக்ஸ் 139 புள்ளிகள் உயர்வு

சென்செக்ஸ் 139 புள்ளிகள் உயர்வு

Published on

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் புதன்கிழமை வர்த்தகம் உயர்வுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 139 புள்ளிகள் (0.24 சதவீதம்) உயர்வடைந்து 58,214 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 44 புள்ளிகள் (0.26 சதவீதம்) உயர்வடைந்து 17,151 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் புதன்கிழமை வர்த்தகம் ஏற்றத்துடனேயேத் தொடங்கியது. காலை 09:49 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 177.59 புள்ளிகள் உயர்வடைந்து 58,252.27 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 41.20 புள்ளிகள் உயர்வடைந்து 17,148.70 ஆக இருந்தது.

வங்கி நெருக்கடி பற்றிய கவலைகள் குறைந்தது, அமெரிக்க பெடரல் வங்கியின் நிதிக்கொள்கை கூட்ட முடிவுக்காக முதலீட்டாளர்களின் காத்திருப்பு ஆகியவற்றுக்கு மத்தியில் இந்திய பங்குச்சந்தைகள் இரண்டாவது நாளாக இன்றும் லாபத்தில் நிறைவடைந்தன.

வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ்139.91 புள்ளிகள் உயர்வடைந்து 58,214.59 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 44.40 புள்ளிகள் உயர்வடைந்து 17,151.90 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை டாடா மோட்டார்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், எம் அண்ட் எம், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், எல் அண்ட் டி, ஹெச்டிஎஃப்சி, ஐடிசி, ஏசியன் பெயின்ட்ஸ் பங்குகள் உயர்வடைந்திருந்தன. நெஸ்ட்லே இந்தியா பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in