

நியூயார்க்: பொருளாதார நிபுணர் அரவிந்த் பனகரியா எழுதிய ‘‘இந்தியாவில் வறுமையும், சமத்துவமின்மையும்: கரேனா வுக்கு முன்பும் பின்பும்’’ என்ற ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடுமையான ஊரடங்கு காலாண்டில் (ஏப்ரல்-ஜூன் 2020) கிராமப்புற வறுமை ஓரளவு உயர்ந்தது. அதன் பின்பு கரோனா பாதிப்புக்கு முந்தைய நிலை அளவுக்கு குறைந்தது.
அதேநேரம், ஏப்ரல்-ஜூன் 2021 காலாண்டில், நகர்ப்புற வறுமை அதிகரித்தது. நான்கு காலாண்டுகளாக நகர்ப்புற வறுமையின் அதிகரிப்பில் உள்ள தொடர்பு-தீவிர தொழில்களின் உற்பத்தியில் ஏற்பட்ட பெரிய சரிவுடன் ஒத்துப்போனது. கூடுதல் 5 கிலோ உணவு தானியங்கள் இலவச விநியோகம், நகர்ப்புற வறுமையின் கூர்மையான சரிவைக் கட்டுப்படுத்த உதவியது.
ஒட்டுமொத்தமாக, கரோனா காலத்தில் இந்தியாவில் வறுமை அதிகரித்து விட்டதாகவும் மற்றும் சமத்துவமின்மை நிலவியதாகவும் தெரிவிக்கப்படும் தகவல்கள் மிகவும் தவறானவை. இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.