

சென்னை: பொதுத்துறை தொலைத் தொடர்புநிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அவ்வப்போது வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது புதியசலுகைகளை அறிவித்துள்ளது.
இதன்படி, வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் ஃபைபர் இணைப்பு பெற்றால், அவர்களுக்கு அதேதரைவழி தொலைபேசி எண் பெறுவதோடு, அதிவேக இன்டர்நெட் மற்றும் அளவில்லா அழைப்பு வழங்கப்படும். குறிப்பிட்ட கால அளவுக்கு மட்டும் வழங்கப்படும் இந்த சலுகைத் திட்டத்தில், 6 மாதங்கள் வரை கட்டணத்தில் ரூ.200 தள்ளுபடியும் வழங்கப்படும்.
வைஃபை ஆப்டிகல் மோடம்: மேலும், புதிதாக ஃபைபர் பிராட்பேண்ட் இணைப்பு பெறுபவர்கள் 6 மற்றும் 12 மாத சந்தாசெலுத்தும் சில குறிப்பிட்ட திட்டங்களை தேர்வு செய்பவர்களுக்கு வைஃபை ஆப்டிகல் மோடம் இலவசமாக வழங்கப்படும். அத்துடன், நிறுவுவதற்கான கட்டணம் ரூ.500-ம்ரத்து செய்யப்படும். இவை தவிர,ஓடிடி திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி, சூப்பர் ஸ்டார் பிரீமியம் பிளஸ் ரூ.999 திட்டத்தின்கீழ், 300-க்கும் மேற்பட்ட டிவி சேனல், 500-க்கும் டிவி நிகழ்ச்சிகள் மற்றும்8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களை கண்டுகளிக்கலாம்.
இத்திட்டங்கள் குறித்து கூடுதல் விவரங்கள் அறிய https://bookmyfiber.bsnl.co.in என்ற இணைய தளத்தைப் பார்க்கலாம். அல்லது 1800-345-1500 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அறியலாம். மேலும் புதிய மொபைல் இணைப்பு பெறுபவர்களுக்கு வரும் 31-ம் தேதி வரை சிம் கார்டு இலவசமாக வழங்கப்படும்.