பங்குச்சந்தை | சென்செக்ஸ் 255 புள்ளிகள் உயர்வு

பங்குச்சந்தை | சென்செக்ஸ் 255 புள்ளிகள் உயர்வு
Updated on
1 min read

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (வெள்ளிக்கிழமை) வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 463 புள்ளிகள் உயர்வடைந்து 58,097 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 136 புள்ளிகள் சரிவுடன் 17,121 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் வார இறுதி நாள் வர்த்தகம் ஏற்றத்துடனேயே தொடங்கியது. காலை 09:59 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 255.81 புள்ளிகள் உயர்வடைந்து 57,890.65 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 87.05 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 17,072.65 ஆக இருந்தது.

ஸ்விஸ் மத்திய வங்கி கிரெடிட் சூயிஸ் வங்கிக்கிக்கு கடன் வழங்குவதாக அறிவித்திருப்பது உலகளாவிய சந்தைகளின் சாதகமான சூழலை ஏற்படுத்தியிருந்தது. இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகளும் இன்று ஏற்றத்துடன் இன்றைய வர்த்தகத்தைத் தொடங்கின.

தனிப்பட்ட பங்குகளைப் பொருத்தவரை எல் அண்ட் டி, டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், விப்ரோ, நெஸ்ட்லே இந்தியா, ஹெச்டிஎஃப்சி, எம் அண்ட் எம், ஹிந்துஸ்தான் யுனிலீவர், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டைட்டன் கம்பெனி, ஏசியன் பெயின்ட்ஸ் பங்குகள் உயர்வில் இருந்தன. ஐடிசி பங்கு சரிவில் இருந்தது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in