Published : 15 Mar 2023 06:21 AM
Last Updated : 15 Mar 2023 06:21 AM

ஹோண்டா சிட்டி புதிய கார் அறிமுகம்

சென்னை: ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் இயக்குநர் (விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல்) யூச்சி முராட்டா கூறியதாவது: ஹோண்டா சிட்டியின் 5-ம்தலைமுறை மாடல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இது பல்வேறு புதிய அம்சங்கள், நேர்த்தியான வெளிப்புற வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது.

இதில் பொருத்தப்பட்டுள்ள ஐ-விடெக் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் லிட்டருக்கு 17.8கி.மீ, ஐ-டிடெக் டீசல் என்ஜின்லிட்டருக்கு 24.1 கி.மீ. மைலேஜ் தரவல்லது. உலகின் முதல் ஐ-எஸ்ஆர்எஸ் ஏர்பேக் சிஸ்டம் குயிக் டெப்லாய்மெண்ட் டெக்னாலஜி இதில் இடம்பெற்றுள்ளது.இதன் விலை ரூ.11.29 லட்சத்திலிருந்து தொடங்குகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x