

லண்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த எஸ்விபி வங்கி திவாலானதாக கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது. இதனால் அந்தவங்கி வாடிக்கையாளர்கள் நிலைகேள்விக்குறியாக உள்ளது. இந்தநிலையில், இங்கிலாந்தில் உள்ளஅதன் துணை நிறுவனத்தை மட்டும் ஹெச்எஸ்பிசி 1 பவுண்டுக்கு அதாவது ரூ.99-க்கு வாங்குவதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து இங்கிலாந்தின் நிதி அமைச்சர் ஜெர்மி ஹண்ட் நேற்று கூறியுள்ளதாவது.
வாடிக்கையாளர்கள் அச்சம்: எஸ்விபி வங்கி திவாலானதை அடுத்து பிரிட்டன் வாடிக்கையாளர்கள் மிகவும் அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர். அவர்களின் அச்சத்தை போக்கிடும் வகையில் சிலிகான் வேலி வங்கியை (யுகே) ஹெச்எஸ்பிசி வங்கி வாங்குகிறது. இதற்காக அரசு பணம் எதுவும் செலவிடப்படவில்லை. அனைத்து வாடிக்கையாளர்களின் டெபாசிட்டுகளும் பத்திரமாக உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
இங்கிலாந்தில் செயல்பட்டு வரும் எஸ்விபி (யுகே) வங்கி வழங்கிய கடன் ரூ.55 ஆயிரம் கோடியாகவும், திரட்டிய டெபாசிட் ரூ.66 ஆயிரம் கோடியாகவும் உள்ளதாக ஹெச்எஸ்பிசி தெரிவித்துள்ளது.