மார்ச் 11, 2023 | தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு;  சவரனுக்கு ரூ.640 உயர்வு

மார்ச் 11, 2023 | தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு;  சவரனுக்கு ரூ.640 உயர்வு
Updated on
1 min read

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 11) சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ரூ.42,160 -க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கங்கள் நிலவுகின்றன. கடந்த வாரத்தில் தங்கம் விலை இறங்கி வந்தது. கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை புதன்கிழமை அதிரடியாக ரூ.560 குறைந்திருந்தது. இந்தநிலையில் தங்கத்தின் விலை மீண்டும் உயரத் தொடங்கி இருக்கிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ. 5,270-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.42,160 -க்கு விற்பனையாகிறது. இதன்படி, நான்கு நாட்களுக்கு பின்னர் தங்கம் விலை மீண்டும் 42,000 தொட்டு இருக்கிறது.

24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.45,056 க்கு விற்பனையாகிறது. இதேபோல், ஒரு கிராம் வெள்ளி ரூ.68.70-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.68,700-ஆக இருக்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in