

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 9) சவரனுக்கு ரூ.80 குறைந்து, ரூ.41,240-க்கு விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கங்கள் நிலவுகின்றன. கடந்த வாரத்தில் தங்கம் விலை தொடர்ந்து இறங்கி வந்தது. தங்கத்தின் விலை குறைவு இந்த வாரமும் தொடர்கிறது. நேற்று அதிரடியாக ரூ.560 குறைந்திருந்தது. இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,155-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.41,240-க்கு விற்பனையாகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.44,136 க்கு விற்பனையாகிறது. இதேபோல், ஒரு கிராம் வெள்ளி ரூ.67.40-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.67,400-ஆக இருக்கிறது.