

புதுடெல்லி: உலகின் மிக நம்பகமான வர்த்தக கூட்டாளியாக இந்தியா திகழ்வதாக ஐஸ்லாந்து வெளியுறவு அமைச்சகத்தின் நிரந்தர செயலர் மார்டின் ஐலோப்சன் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஜி20 நாடுகளின் கூட்டத்தில் கலந்து கொண்ட ஐலோப்சன் மேலும் கூறியதாவது: உலக நாடுகள் இன்றைக்கு இந்தியாவை மிகவும் நம்பிக்கைக் குரிய வர்த்தகப் பங்கு தாரராக கருதுகின்றன. வணிகம் செய்ய ஏற்ற இடமாக இந்தியா உள்ளது. நிலையான அரசியல் சூழல் காரணமாக ஆரோக்கியமான பொருளாதார வளர்ச்சியினை இந்தியா பெற்றுள்ளது. சட்ட ரீதியான பாதுகாப்பு உள்ளிட்ட நிறுவனங்களுக்கு சாதகமாக பல அம்சங்கள் உள்ளன.
கடல் வளத்தை பாதுகாப்பதில் இந்தியாவும், ஐஸ்லாந்தும் இணைந்து பணியாற்றி வருகின் றன. மேலும், மீன்பிடித் தொழிலிலும் இருநாடுகளும் நெருங்கி பணியாற்றி வருகின்றன. பெருங் கடலில் மாசுபாட்டை எதிர்த்து இருநாடுகளும் இணைந்தே குரல்கொடுத்து வருகின்றன. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு இயற்கையாகவே ஒன்று பட்டிருப்பதால் இந்தியா மிக நம்பிக்கைக்குரிய வர்த்தக கூட்டாளியாக உள்ளது.
இந்தியாவில் ஏராளமான தொழில்நுட்ப திறமைகள் உள்ளன. அவற்றை பயன்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் ஐஸ்லாந்தில் ஏராளமாக உள்ளன. அண்மையில் வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயலுடனான சந்திப்பு மிகவும் சாதகமாக இருந்தது. எனவே இந்தியா-ஐஸ்லாந்து இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும். ஜி20 அமைப்புக்கு தலைமை யேற்றுள்ள இந்தியா அதற்கான முக்கிய கூட்டங்களை எவ்வளவு திறமையாக நிர்வகித்து வருகிறது என்பதை தற்போது உலகை கவனிக்க வைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.