பங்குச்சந்தை | சென்செக்ஸ் 161 புள்ளிகள் சரிவு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (புதன்கிழமை) வர்த்தகம் வீழ்ச்சியுடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 323 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 59,901 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 88 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 17,623 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் புதன்கிழமை வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. காலை 09:56 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 161.97 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 60,062.49 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 45.00 புள்ளிகள் சரிந்து 17,666.45 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளின் பாதகமான சூழல் காரணமாக ஹோலி விடுமுறைக்கு பின்னர் திறந்த பங்குச்சந்தைகள் வீழ்ச்சியுடனேயே தொடங்கின.

தனிப்பட்ட பங்குகளைப் பொருத்தவரை எல் அண்ட் டி, டாடா ஸ்டீல், ஹெச்டிஎஃப்சி பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. ஹிந்துஸ்தான் யுனிலீவர், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், நெஸ்ட்லே இந்தியா, எம் அண்ட் எம், ஐடிசி, டாடா மோட்டார்ஸ், விப்ரோ, ஏசியன் பெயின்ட்ஸ் பங்குகள் சரிவில் இருந்தன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in