Published : 08 Sep 2017 09:11 AM
Last Updated : 08 Sep 2017 09:11 AM

புதிய டிவிஎஸ் விக்டர் பைக் அறிமுகம்

இரு சக்கர வாகன தயாரிப்பில் முன்னணி நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் உயர் ரக விக்டர் பைக்கை நேற்று அறிமுகம் செய்துள்ளது. விழாக் கால விற்பனையை கருத்தில் கொண்டு புதிய பைக்கை டிவிஎஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

``மேற்கு வங்காளம் மாநிலம் எங்களுக்கு முக்கியமான சந்தை. அதனால்தான் 110சிசி திறன் கொண்ட உயர்ரக விக்டர் பைக்கை இங்கு அறிமுகப்படுத்தியுள்ளோம்’’ என்று டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் மார்க்கெட்டிங்க் பிரிவு துணைத்தலைவர் அனிருத் ஹால்தார் தெரிவித்தார். இந்த புதிய உயர்ரக டிவிஎஸ் விக்டர் பைக் கருப்பு நிறத்தில் கிராபிக்ஸ் வடிவமைப்போடு வந்துள்ளது. இந்த பைக்கின் டெல்லி விற்பனையக விலை ரூ.55,065.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x