வாடிக்கையாளர் டெலிவரி பெற்ற நிலையில் தீப்பற்றி எரிந்த ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 - வீடியோ

தீப்பற்றி எரியும் புல்லட்
தீப்பற்றி எரியும் புல்லட்
Updated on
1 min read

வாடிக்கையாளர் ஒருவர் புதிதாக டெலிவரி பெற்ற ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 சிசி வாகனம் தீப்பற்றி எரிந்துள்ளதாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் புல்லட் ஒன்று தீப்பிடித்து எரிகிறது. அதை அணைக்க பலரும் முயற்சிக்கின்றனர். அதுவும் புல்லட் சர்வீஸ் ஸ்டேஷனுக்குள் இது நடந்துள்ளது.

இந்தியாவில் பெரும்பாலானவர்களின் பேவரைட் இருசக்கர மோட்டார் வாகனங்களில் நிச்சயம் ராயல் என்ஃபீல்டு புல்லட் இருக்கும். புல்லட்டின் சைலன்சலிருந்து வெளிவரும் சத்தமும், சீறி வரும் காளையை போன்ற தோற்றமும்தான் அதன் கெத்து. அதனால் வாகன பிரியர்களின் பேவரைட் லிஸ்டில் புல்லட் பைக் தவிர்க்க முடியாத ஒன்று.

இந்திய வாகன சந்தையில் இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.1.52 முதல் ரூ.2.21 லட்சம் வரை உள்ளது. புல்லட் 350 சிசி கிளாசிக், கிளாசிக் சிக்னல்ஸ் என சில மாடல்கள் இதில் அடங்கும்.

இந்த வீடியோவில் தீப்பிடித்து எரியும் புல்லட் ஒன்றை அணைக்க சிலர் முயற்சிக்கின்றனர். அருகில் நிறைய புல்லட்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனை அஜய் ஆன் வீல்ஸ் என்ற பெயரில் கூகுள் பயனர் ஒருவர் யூட்யூப் தளத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. ஒயரிங் ஷார்ட் சர்க்யூட் காரணமாக இப்படி நடந்திருக்கலாம் என வல்லுநர் ஒருவர் தெரிவித்துள்ளார். வீடியோ லிங்க்..

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in