பங்குச்சந்தை |  சென்செக்ஸ் 53 புள்ளிகள் உயர்வு 

பங்குச்சந்தை |  சென்செக்ஸ் 53 புள்ளிகள் உயர்வு 
Updated on
1 min read

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (செவ்வாய்க்கிழமை) வர்த்தகம் ஏற்ற இறக்கமின்றி தட்டையாக தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 41 புள்ளிகள் சரிந்து 59,246 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 9 புள்ளிகள் சரிவடைந்து 17,382 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று வர்த்தகம் சரிவுடனேயே தொடங்கியது. இருந்த போதிலும் தொடக்க வர்த்தகத்தில் சரிவிலிருந்து மீண்டு லாபத்தை நோக்கிச் சென்றது. காலை 09:55 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 53.62 புள்ளிகள் உயர்வடைந்து 59,341.97 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 28.90 புள்ளிகள் உயர்வடைந்து 17,421.60 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளின் நிலவரம் சாதமாக இருந்த போதிலும், டிசம்பர் காலாண்டிற்கான நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தரவுகள் இன்று வெளியாக உள்ளது, ஊடகம் மற்றும் வாகனப் பங்குகள் லாபங்களில் விற்பனையான நிலையில், உலோக பங்குகளின் சரிவால் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்ற இறக்கமின்றி தட்டையாகவே இன்று தொடங்கின.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை எம் அண்ட் எம், டாடா மோட்டார்ஸ், எல் அண்ட் டி, விப்ரோ, ஹெச்டிஎஃப்சி, ஏசியன் பெயின்ட்ஸ் பங்குகள் உயர்வில் இருந்தன. ஐடிசி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், நெஸ்ட்லே இந்தியா, டாடா ஸ்டீல் பங்குகள் சரிவில் இருந்தன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in