ஜிஎஸ்டியின் கீழ் வரித்தாக்கல்: ஒரு மணி நேரத்துக்கு 80,000 படிவங்கள் பதிவேற்றம்; ஜிஎஸ்டிஎன் தலைவர் அஜய் பூஷண் பாண்டே தகவல்

ஜிஎஸ்டியின் கீழ் வரித்தாக்கல்: ஒரு மணி நேரத்துக்கு 80,000 படிவங்கள் பதிவேற்றம்; ஜிஎஸ்டிஎன் தலைவர் அஜய் பூஷண் பாண்டே தகவல்
Updated on
1 min read

ஒவ்வொரு ஒரு மணி நேரத்துக்கும் 80,000 ஜிஎஸ்டிஆர் - 3பி வரித்தாக்கல் படிவங்கள் ஆன்லைன் மூலமாக பதிவேற்றப்பட்டு வருவதாக ஜிஎஸ்டிஎன் தலைவர் அஜய் பூஷன் பாண்டே தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதத்துக்கான ஜிஎஸ்டிஆர் - 3பி படிவங்கள் தாக்கல் செய்ய நேற்றே கடைசி நாள் என்பதால் அனைத்து வணிகர்களும் வரித்தாக்கல் ஜிஎஸ்டிஆர் - 3பி படிவங்களை தாக்கல் செய்து வருகின்றனர். ஒவ்வொரு ஒருமணி நேரத்துக்கும் 80,000 ஆயிரம் படிவங்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை ஜிஎஸ்டிஎன் நெட்வொர்க் எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் சரியாக இயங்கிவருகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த ஜூலை 1-ம் தேதி ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இரண்டாவது மாதமாக ஜிஎஸ்டிஆர்-3பி படிவங்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த செப்டம்பர் 19-ம் தேதி நிலவரப்படி 6.9 லட்சம் பேர் மட்டுமே ஜிஎஸ்டிஆர் - 3பி படிவங்களை தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கடைசி நாளில் அதிகம் பேர் வரித்தாக்கல் செய்வார்கள் என்பதற்காக அதற்கேற்ற வகையில் ஜிஎஸ்டிஎன் நெட்வொர்க் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் மொத்தமாக 47 லட்சம் ஜிஎஸ்டிஆர் -3பி வரித்தாக்கல் படிவங்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. முதல் மாதத்தில் ரூ.95,000 கோடி வரி வசூல் செய்யப்பட்டிருந்தது. ஆகஸ்ட் மாதமும் 47 லட்சம் ஜிஎஸ்டிஆர்-3பி படிவங்கள் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in