40 பில்லியன் டாலருக்கும் குறைவாக சரிந்த கெளதம் அதானியின் சொத்து மதிப்பு

கெளதம் அதானி | கோப்புப்படம்
கெளதம் அதானி | கோப்புப்படம்
Updated on
1 min read

அகமதாபாத்: அதானி குழும தலைவரான கெளதம் அதானியின் சொத்து மதிப்பு 40 பில்லியன் டாலருக்கும் குறைவாக சரிந்துள்ளது. இது கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அவர் எதிர்கொண்டுள்ள சரிவு எனத் தெரிகிறது.

துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி, மின் உற்பத்தி மற்றும் ரியல் எஸ்டேட் முதலான தொழில்களில் ஈடுபட்டு வருகிறார் கெளதம் அதானி. 60 வயதான அவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். கடந்த சில ஆண்டுகளாகவே உலக பணக்காரர்களின் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் அவர் அண்மையில் அதில் பின்னடவை சந்தித்தார்.

கடந்த ஒரு மாத காலத்தில் சுமார் 80 பில்லியன் டாலர்களை அவர் தனது சொத்து மதிப்பில் இழந்துள்ளார். தற்போது அவரது மொத்த சொத்து மதிப்பு 39.9 பில்லியன் டாலர்களாக உள்ளது. இது ப்ளூம்பெர்க் தளம் கொடுத்துள்ள நிகழ்நேர தகவல். உலக பணக்காரர்கள் பட்டியலில் தற்போது அவர் 30-வது இடத்தில் உள்ளார்.

அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறது என்றும், அக்குழுமத்துக்கு மிக அதிக அளவில் கடன் உள்ளது என்றும் அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் கடந்த மாதம் அறிக்கை வெளியிட்டது. அதன் பின்னர் இந்த சரிவை அவர் எதிர்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதானி குழுமம் ஹிண்டன்பர்க் முன்வைத்துள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ளது. இருந்தபோதும் சந்தையில் தொடர்ந்து சரிவை கண்டு வருகிறது அக்குழுமம். கடந்த 2021 பிப்ரவரியில் சுமார் 40 பில்லியன் டாலர்களை தனது சொத்து மதிப்பாக வைத்திருந்துள்ளார் அதானி. தற்போது கிட்டத்தட்ட அதே நிலையை அவர் எட்டியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in