

சர்வதேச தர மதிப்பீட்டு நிறுவனமான மூடி’ஸ் பொதுத்துறை வங்கியான ஐடிபிஐ வங்கியின் தர மதிப்பீட்டை குறைத்திருக்கிறது. பிஏஏ3 என்னும் நிலையில் இருந்து பிஏ2 என்னும் நிலைக்கு குறைத்திருக்கிறது. வங்கியின் நிதி நிலைமை சரியில்லாத காரணத்தால் வங்கி யின் ரிஸ்க் அதிகரித்திருக்கிறது. அதனால் தர மதிப்பீடு குறைக்கப்பட்டிருப்பதாக மூடி’ஸ் விளக்கம் அளித்திருக்கிறது.
முன்னதாக இக்ரா மற்றும் இந்தியா ரேட்டிங்க்ஸ் ஆகிய நிறுவனங்களும் ஐடிபிஐ வங்கியின் தர மதிப்பீட்டை குறைத்தது கவனிக்கத்தக்கது.
இது தொடர்பாக ஐடிபிஐ வங்கி கூறும்போது மத்திய அரசு ரூ.1,900 கோடி வங்கியில் முதலீடு செய்திருக் கிறது. அரசின் உதவி தொடர்ந்து கிடைத்து வருகிறது. தவிர நிறு வனத்தின் முக்கியமில்லாத சொத்து களை விற்பதன் மூலம் நிதி திரட்ட வும் வங்கி நிர்வாகம் திட்டமிட்டிருப்ப தாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் கடன்களை திரும்ப வாங்கும் நடவடிக்கைகளை எடுப்பது, செலவுகளை குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளையும் வங்கி எடுத்து வருவதாக நிர்வாக இயக்குநர் மகேஷ் குமார் ஜெயின் தெரிவித்தார். மார்ச் காலாண்டின் வங்கியின் மொத்த வாராக்கடன் 21 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. நேற்றைய வர்த்தகத்தில் இதன் பங்கு 1.15% உயர்ந்து 61.70 ரூபாயில் முடிவடைந்தது.