பொருளாதார வளர்ச்சியில் குறு கடன்களின் தாக்கம் அதிகம்

பொருளாதார வளர்ச்சியில் குறு கடன்களின் தாக்கம் அதிகம்
Updated on
1 min read

சென்னை: நிதிச் சேவை விரிவாக்கம், பொருளாதார வளர்ச்சியில் குறு கடன்களின் (மைக்ரோ பைனான்ஸ்) தாக்கம் குறித்த கருத்தரங்கு சென்னையில் நடைபெற்றது.

இந்த கருத்தரங்கை தொடங்கி வைத்த சா-தன் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜிஜி மேமன் கூறியது:

இந்திய அளவில் நிதிச் சேவை விரிவாக்கத்தில் தென்னிந்திய மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன. இதற்கு இப்பகுதிகளில் வெற்றிகரமாக இயங்கி வரும் குறு கடன் நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளன. நிதி சேவை விரிவாக்கத்தின் நன்மைகள் கிராமப்புறமக்களையும் சென்றடைவதற்கு குறு கடன் நிறுவனங்கள் பெரிய அளவில் உதவி வருகின்றன.

இந்நிலையில், இந்த கருத்தரங்கின் மூலம் தென் மாநிலங்களில் நிதி சார்ந்த சேவைகளின் இலக்குகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியில் குறு கடன்களின் தாக்கம் குறித்து விரிவாக அலசப்பட்டது.

மேலும், கொள்கை வகுப்பாளர்கள், ஒழுங்காற்று அமைப்பினர் மற்றும் தொழில்சார்ந்த நிபுணர்கள் தங்களது கருத்துகளை இந்த கருத்தரங்கில் பகிர்ந்து கொண்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in