

பிரதமர் மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற மூன்று ஆண்டு களில் பட்டியலிடப்பட்ட நிறுவனங் களின் சந்தை மதிப்பு ரூ.50 லட்சம் கோடி உயர்ந்திருக்கிறது. டாடா, பிர்லா, அம்பானி மற்றும் பஜாஜ் குழுமங்களின் சந்தை மதிப்பு தலா 1 லட்சம் கோடி ரூபாய் உயர்ந்திருக்கிறது.
தவிர ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ, வேதாந்தா, கோத்ரேஜ், மஹிந்திரா, ஹிந்துஜா மற்றும் ஐடிசி ஆகிய குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பும் வேகமாக உயர்ந்திருக் கிறது. மாறாக பொதுத்துறை நிறு வனங்களில் சில நிறுவனங்களின் சந்தை மதிப்பு குறைந்தும், சில நிறுவனங்களின் சந்தை மதிப்பு உயர்ந்தும் இருக்கிறது. கடந்த மூன்று ஆண்டு காலத்தில் பிஎஸ்இ பொதுத்துறை குறியீடு 22 சதவீதம் மட்டுமே உயர்ந்திருக்கிறது. சந்தை மதிப்பு அடிப்படையில் பார்க்கும் போது ரூ.3.65 லட்சம் கோடி மட்டுமே உயர்ந்திருக்கிறது. மொத்த ரூ.50 லட்சம் கோடி உயர்ந்திருக்கும் பட்சத்தில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு 8 சதவீதத்துக்கும் குறைவாக இருக்கிறது.
கடந்த மூன்று ஆண்டு காலத்தில் சென்செக்ஸ் 6000 புள்ளிகள் அல்லது 26 சதவீதம் உயர்ந்திருக்கிறது. பிஎஸ்இயில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75 லட்சம் கோடியில் இருந்து ரூ.125 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது.
இந்த ஏற்றத்தில் பெரும்பகுதி நிறுவனர்களுக்கு சென்றிருக் கிறது. அதனை தொடர்ந்து, அந்நிய முதலீட்டாளர்கள், உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு சென்றது. பங்குச்சந்தையில் பட்டியலிடப் பட்ட நிறுவனங்களில் சிறு முதலீட் டாளர்களின் நேரடி பங்கு 10 சதவீதத் துக்குள் மட்டுமே இருக்கிறது.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் உயர்ந்து ரூ.4.50 லட்சம் கோடியாக இருக்கிறது.
குமார் மங்கலம் பிர்லா தலைமையிலான குழுமத்தின் சந்தை மதிப்பு ரூ. 1 லட்சம் கோடி உயர்ந்து ரூ.3 லட்சம் கோடியாக இருக்கிறது.
பஜாஜ் குழுமத்தில் பட்டிய லிடப்பட்ட ஐந்து நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.1.70 லட்சம் கோடி உயர்ந்திருக்கிறது. ஹெச்டிஎப்சி குழுமத்தின் மூன்று பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 3 லட்சம் கோடி உயர்ந்து ரூ.6.7 லட்சம் கோடியாக இருக்கிறது.
டாடா குழுமத்தில் பல பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.1.45 லட்சம் கோடி உயர்ந்து மொத்த சந்தை மதிப்பு ரூ.8.55 லட்சம் கோடியாக இருக்கிறது. டிசிஎஸ் சந்தை மதிப்பு மட்டும் ரூ.92,000 கோடி உயர்ந்திருக்கிறது.