

வீட்டு உபயோகப் பொருட்களை தவணை முறையில் வாங்குவதற்கு சிறப்பு கடன் அட்டையை (இஎம்ஐ கார்டு) விவேக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பஜாஜ் பின்சர்வ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
நேற்று நடைபெற்ற இதன் அறிமுக விழாவில், விவேக்ஸ் பர்னிச்சர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பி.ஏ.சீனிவாசா, தலைவர் பி.ஏ.கோதண்டராமன், பஜாஜ் பின்சர்வ் நிறுவனத்தின் துணைத்தலைவர் அமித் ரகுவன்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த சிறப்பு கடன் அட்டையைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வட்டி ஏதுமின்றி, மாதத் தவணையில் திரும்பச் செலுத்தும் வகையில் வாங்கிக் கொள்ளலாம்.
ரூ.15,000 முதல் ரூ.3,00,000 வரை முன் அனுமதி பெறப்பட்ட கடன் தொகையை இந்த சிறப்பு கடன் அட்டை வழங்குகிறது. ரூ.7,000 முதல் பொருட்களையும், வீட்டுப் பயன்பாட்டு சாதனங்களையும் வாங்கலாம்.