

மருந்து துறை நிறுவனமான சன் பார்மாவின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 14 சதவீதம் சரிந்து ரூ.1,223 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலம் ரூ.1,416 கோடியாக இருக்கிறது.
செயல்பாடுகளின் மூலம் கிடைத்த வருமானமும் ரூ.7,415 கோடியில் இருந்து ரூ.6,825 கோடியாக சரிந்திருக்கிறது. ஒரு பங்குக்கு ரூ.3.5 டிவிடெண்ட் வழங்க இயக்குநர் குழு பரிந்துரை செய்திருக்கிறது.