இந்தியா-இஸ்ரேல் இடையே விரைவில் தடையற்ற வர்த்தகம்

இந்தியா-இஸ்ரேல் இடையே விரைவில் தடையற்ற வர்த்தகம்
Updated on
1 min read

புதுடெல்லி: இஸ்ரேலிய தூதர் நவோர் கிலோன் நேற்று கூறியதாவது: இஸ்ரேலின் முக்கிய துறை முகமாக விளங்கும் ஹைஃபாவை அதானி குழுமத்திடம் ஒப்படைத்துள்ளது இந்தியாவின் மீது இஸ்ரேல் வைத்துள்ள நம்பிக்கையின் பிரதிபலிப்பாகும். தடையற்ற வர்த்தகத்தை உறுதி செய்வதில் இரு நாடுகளும் ஆர்வமாக உள்ளன.

இரு நாடுகளும் வலிமையான ராணுவ உறவுகளைக் கொண்டுள்ளன. எனவே, பாதுகாப்பு உற்பத்தியில் தன்னிறைவு பெறும் முயற்சிகளில் இந்தியாவை ஆதரிப்பது இஸ்ரேலுக்கும் நன்மை விளைவிக்கும். வரவிருக்கும் உயர்நிலைக் குழு பேச்சுவார்த்தையில் தடையற்ற வர்த்தக உறவை முன்னெடுத்துச் செல்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, விவசாயம் உட்பட பல துறைகளில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் இஸ்ரேலிடம் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

அதானி குழுமம் இஸ்ரேலின் ஹைஃபா துறைமுகத்தை 1.2 பில்லியன் டாலருக்கு கையகப் படுத்தியது. சரக்கு மற்றும் சுற்றுலாப் பயணிகள் கப்பலை கையாள்வதில் இது 2-வது பெரிய துறைமுகமாக விளங்குகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in